Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

திருச்செந்தூரில் 75 அடி தூரம் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூரில் 75 அடி தூரம் திடீரென உள்வாங்கிய கடல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடையேயுள்ள கடல் பகுதியில், பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நாட்களுக்கு முந்தைய நாளிலும், அடுத்த நாளிலும் இத்தகைய மாற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் கடல்நீர் திடீரென சுமார் 75 அடி தூரம் உள்வாங்கியது.

Advertisement
இதனால், கடலுக்குள் இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. மேலும், பச்சை நிறப் பாறைகளுக்கு இடையே பழமையான சிலைகளும் தென்பட்டன. கடல் உள்வாங்கியதைக் காண வந்த பக்தர்கள், ஆபத்தைப் பொருட்படுத்தாமல் பாறைகளின் மீது நின்று செல்பி எடுத்தனர். இதையடுத்து, கடல் உள்வாங்கிய பகுதிகளுக்குச் சென்ற பக்தர்களுக்கு காவல்துறையினரும், கோவில் கடற்கரை பாதுகாப்புப் பணியினரும் எச்சரிக்கை விடுத்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு