Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

தனுஷ் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

தனுஷ் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

நடிகர் தனுஷுக்குப் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எந்தக் கட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தனுஷின் தனிப்பட்ட முடிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், நடிகர் தனுஷ் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும் அதில் தவறில்லை என்று கூறினார். “நாங்களே பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். உலகத் தலைவராகப் பிரதமர் மோடி உள்ளார். அப்படிப்பட்ட கட்சியுடன் தனுஷ் பேசுவதில் என்ன தவறு? அவர் பேசினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை பேசியிருந்தாலும் அதில் என்ன தவறு இருக்கிறது?” என அவர் தெரிவித்தார். தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர். தொடர்பான விவகாரம் குறித்துப் பேசிய அவர், இறந்த வாக்காளர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ள பெயர்கள், வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் ஆகியோரின் விவரங்களைச் சரிபார்க்கும்போது பல கோடி அளவிலான கணக்குகள் கிடைப்பதாகக் குறிப்பிட்டார். இவற்றுக்கான கணக்குகள் காட்டப்படுவதாகவும், முறைகேடு நடைபெற்றதாகக் கூறுபவர்கள் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மதுரை, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் நடந்ததாகக் கூறப்படும் விவரங்களைக் குறிப்பிட்டு, இதன் அடிப்படையில் பதவி விலக வேண்டும் எனக் கோரினாலும் அதில் தவறில்லை என்றார். தனுஷின் அரசியல் நகர்வுகள் குறித்து எழும் கேள்விகள் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. அவரது அரசியல் வெற்றி நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்ததுடன், திரையுலகைச் சேர்ந்த பிறரிடமும் அரசியல் ஆர்வம் அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

Advertisement
இந்த நிலையில், நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் அண்மைக்கால நடவடிக்கைகளும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னையின் ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் நேற்று மாவட்ட மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு வெள்ளியால் செய்யப்பட்ட காமாட்சி விளக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. காமாட்சி விளக்கில் இடம்பெற்ற தாமரைச் சின்னம் வழங்கப்பட்ட விளக்குகளின் அடிப்பகுதியில் தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. பிரபல நகைக்கடையில் வாங்கப்பட்ட இந்த விளக்குகளில் தாமரைச் சின்னத்தைப் பிரத்யேகமாகப் பொறிக்குமாறு தனுஷ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனுஷ் பாஜகவில் இணையத் திட்டமிடுகிறாரா அல்லது அவர் தொடங்கவுள்ளதாகக் கூறப்படும் அரசியல் கட்சியில் தாமரைச் சின்னம் முக்கிய இடம் பெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விளக்குகளில் இடம்பெற்ற தாமரை முத்திரை குறித்த விவாதம் நேற்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்ட வெள்ளி காமாட்சி விளக்குகளை வாங்குவதற்கு மட்டும் சுமார் ரூ.1.5 கோடி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு