Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் கேட்டது குற்றமா? பிரிட்ஜ் முதல் பீரங்கி வரை ஆர்டர்... திணறும் மதுரை இன்ஸ்டா பிரபலம்!

தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் கேட்டது குற்றமா? பிரிட்ஜ் முதல் பீரங்கி வரை ஆர்டர்... திணறும் மதுரை இன்ஸ்டா பிரபலம்!

மதுரையைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான வீரமணி, தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி அனுப்புமாறு தனது பின்தொடர்பவர்களிடம் கேட்ட நிலையில், அவருக்கு பல்வேறு பொருட்கள் தொடர்ந்து ஆர்டர் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் பாக்கெட் முதல் டிவி, பிரிட்ஜ் எனப் பல பொருட்கள் அவரது முகவரிக்கு அனுப்பப்பட்டதால், தற்போது அவர் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார். மதுரை வட்டாரப் பேச்சால் பிரபலமானவர் சமூக வலைத்தளங்களில் 'வணக்கம் நண்பர்களே' எனத் தொடங்கி, மதுரை வட்டார மொழியில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வருபவர் வீரமணி. நகைச்சுவையாகவும், சில நேரங்களில் மற்றவர்களை விமர்சித்தும் அவர் வெளியிடும் வீடியோக்கள் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சனங்களையும் சந்தித்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு, கேரளாவுக்குச் சுற்றுலா செல்லப் பண உதவி கேட்டு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது வங்கிக் கணக்கில் பணம் அனுப்புமாறு கேட்டுக்கொண்டதுடன், பணம் செலுத்துவதற்கான க்யூஆர் குறியீட்டையும் பகிர்ந்திருந்தார். இதையடுத்து சிலர் அவருக்கு ரூ.6 ஆயிரம் வரை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர் சுற்றுலா தொடர்பான வீடியோக்களையும் அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். ஸ்வீட் பாக்ஸ் கேட்டதால் வந்த சிக்கல் தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களிடம் ஸ்வீட் பாக்ஸ் வாங்கி அனுப்புமாறு வீரமணி கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்தவர்களுடன் தனது வீட்டின் முகவரியையும் அவர் பகிர்ந்துள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட சில குறும்புக்கார நெட்டிசன்கள், பல்வேறு ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் வாயிலாகப் பொருட்களைப் பணம் செலுத்திப் பெறும் முறையில் (Cash on Delivery) ஆர்டர் செய்து அவரது முகவரிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் சிறிய பொருட்களாக இருந்த ஆர்டர்கள், பின்னர் பால் பாக்கெட், தொலைக்காட்சி, பிரிட்ஜ் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் வரை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அவரது பெயரில் ஆர்டர் செய்யப்பட்டதால், அவற்றைக் கொண்டு வரும் விநியோக நிறுவன ஊழியர்கள் பணம் செலுத்துமாறு தொடர்ந்து கேட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள்; வீட்டைத் தேடி வந்த பொருட்கள் விசாரித்தபோது, வீரமணியின் முகவரிக்கு 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பல்வேறு நிறுவனங்களின் வாகனங்கள் அடுத்தடுத்து பொருட்களுடன் அவரது வீட்டுக்கு வந்ததால், அவர் கடும் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பொருட்களை விநியோகிக்க வந்தவர்களிடமும் அவர் கடுமையாக நடந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவர் ரூ.1 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சியை ஆர்டர் செய்திருந்த நிலையில், மற்றொருவர் ஜே.சி.பி. இயந்திரத்தையே ஆர்டர் செய்துள்ளார். இதுமட்டுமின்றி, ரூ.70 கோடி மதிப்பிலான ராணுவ பீரங்கி ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறும் ஸ்கிரீன்ஷாட்டையும் வீரமணி பகிர்ந்துள்ளார். 'தயவுசெய்து ஆர்டர் செய்வதை நிறுத்துங்கள்' தொடக்கத்தில் தனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு சம்பவத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து வந்த வீரமணி, இந்த விவகாரம் எல்லை மீறியதால் பின்தொடர்பவர்களிடம் உதவி கேட்பதற்குப் பதிலாக, ஆர்டர்களை நிறுத்துமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளிக்கு இனிப்பு வாங்கி அனுப்புமாறு கேட்டது தனக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொடர்ந்து பொருட்கள் வந்து கொண்டிருப்பதால் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைக் குறிவைத்து இவ்வாறு செய்வதை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே, தொடர்ந்து பொருட்கள் விநியோகிக்கப்படுவதால் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறி, பெரிய பைகளுடன் அவர் செல்லும் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு