Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 12 செப்டம்பர் 2026 | 27 ஆவணி பராபவ வருடம்

'தி பாரடைஸ்' படத்தில் சிறப்பு பாடல்: சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்

'தி பாரடைஸ்' படத்தில் சிறப்பு பாடல்: சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகர் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடல் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.‘தசரா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்து வரும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.இந்நிலையில், ‘தி பாரடைஸ்’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் கீர்த்தி சுரேஷ் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement
இந்த பாடலுக்காக பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த பாடலுக்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ‘தசரா’ படத்தில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
PRGI NO : TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு