Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 31 அக்டோபர் 2026 | 14 ஐப்பசி பராபவ வருடம்

திருவண்ணாமலை: கார் - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் படுகாயம்

திருவண்ணாமலை: கார் - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் படுகாயம்

திருவண்ணாமலை அருகே கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் உள்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் காரில் ஏலகிரி மலைக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து திருவண்ணாமலை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மண்மலை அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோ மீது கார் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணிகளும், ஆட்டோவை ஓட்டி வந்த ஏழுமலையும் பலத்த காயமடைந்தனர்.

Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் ஏழுமலை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவரும் செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு