Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

திருப்பூர் கல்லம்பாளையத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது

திருப்பூர் கல்லம்பாளையத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது

திருப்பூர் கல்லம்பாளையம் ரெயில்வே தண்டவாளப் பகுதியில் உள்ள ஒற்றைக்கண் பாலத்தில் கழிவுநீர் செல்வதற்காக தனியாக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்ததால் கழிவுகள் தேங்கி, கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின்போது கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதுகுறித்து படத்துடன் ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியானது.இதன் தொடர்ச்சியாக, தூய்மை பணியாளர்கள் சம்பந்தப்பட்ட கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்தனர்.

Advertisement
தற்போது கழிவுநீர் தடையின்றி கால்வாய் வழியாக சென்று வருகிறது.கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதுகுறித்த செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு