“தி.மு.க., கண்டிராத வெற்றியும் இல்லை; சந்தித்திராத தோல்வியும் இல்லை” - கனிமொழி
திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் பயணத்தில் 78-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவான தி.மு.க., இதுவரை வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.