திராவிட முன்னேற்றக் கழகம் தனது அரசியல் பயணத்தில் 78-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழினத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவான தி.மு.க., இதுவரை வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ஆட்சி வரும், போகும்; அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!” என்ற முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளை மனதில் கொண்டு, கட்சியின் கொள்கைப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.