Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 25 செப்டம்பர் 2026 | 9 புரட்டாசி பராபவ வருடம்

தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க எடப்பாடி பழனிசாமி முயன்றார்: அருண்ராஜ் குற்றச்சாட்டு

தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க எடப்பாடி பழனிசாமி முயன்றார்: அருண்ராஜ் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தி.மு.க.வின் நிலைப்பாட்டில் தற்போது குழப்பம் காணப்படுகிறது. அந்தக் கட்சியினர் மீது சி.பி.ஐ. வழக்குகள் உள்ளன. தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், அ.தி.மு.க.வில் 32-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கியுள்ளார். அவர்களும் துரோகம் செய்ததாக கருதுகிறாரா? தற்போது அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பு இல்லை. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ரகசிய உடன்பாட்டுடன் செயல்பட்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்தன.

Advertisement
எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைப்பதற்காக பல கோடி ரூபாயை தயாராக வைத்திருந்தார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்களையும் விலைக்கு வாங்க அவர் முயன்றார். துரோகத்தை செய்தவர் எடப்பாடி பழனிசாமிதான். எடப்பாடி தொகுதியில் ரூ.25 கோடி கொடுத்து த.வெ.க. வேட்பாளரை விலைக்கு வாங்கியுள்ளார். அங்கு எங்களது வேட்பாளர் போட்டியிட்டிருந்தால், எடப்பாடி பழனிசாமி டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. இதுதான் எடப்பாடி பழனிசாமியின் துரோக வரலாறு” என்று அருண்ராஜ் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு