Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

தமிழகத்துக்கு 4,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு 4,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58-வது கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 25-ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போதிய மழை பெய்யாததுடன், அணைகளுக்கு எதிர்பார்த்த அளவில் நீர்வரத்து இல்லை என்பதைக் காரணமாகக் கூறி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடகா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Advertisement
இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன் முடிவில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, கர்நாடக அரசுக்கு இந்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு