தமிழகத்துக்கு 4,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்துக்கு 4,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழகத்துக்கு 4,000 கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 58-வது கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 25-ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போதிய மழை பெய்யாததுடன், அணைகளுக்கு எதிர்பார்த்த அளவில் நீர்வரத்து இல்லை என்பதைக் காரணமாகக் கூறி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடகா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். இதன் முடிவில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்று, கர்நாடக அரசுக்கு இந்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ளது.