Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

தமிழகத்தில் சர்க்கரை விலை குறைவு: கிலோ ரூ.65-க்கு விற்பனை

தமிழகத்தில் சர்க்கரை விலை குறைவு: கிலோ ரூ.65-க்கு விற்பனை

தமிழகத்தில் சர்க்கரை விலை 9.7 சதவீதம் குறைந்து, தற்போது ஒரு கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தமிழகத்திற்கு முக்கியமாக சர்க்கரை வழங்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களில் முறையற்ற பருவமழை காரணமாக கரும்பு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்பட்டது. இதன் தாக்கமாக தமிழகத்தில் சர்க்கரை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. விலை உயர்வை சாதகமாக பயன்படுத்தி மராட்டிய மாநிலத்தில் உள்ள சில சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை பதுக்கலும் நடைபெற்றதாக கூறப்பட்டது. மேலும், இ-20 பெட்ரோல் தயாரிப்புக்காக கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதும் சர்க்கரை விலை உயர்வுக்கு காரணம் என கூறப்பட்டது. இதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்து, சர்க்கரை விலை உயர்வுக்கும் இ-20 பெட்ரோல் தயாரிப்புக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்தது.இந்நிலையில், சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து, நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் ஒரு கிலோ ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டது.விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.

Advertisement
அதேபோல், சர்க்கரை ஆலைகளில் சோதனைகள் நடத்தப்பட்டு பதுக்கலை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.இதன் விளைவாக வெளிச்சந்தையில் சர்க்கரை கையிருப்பு சீராகி, விலை குறையத் தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில், ரூ.72-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சர்க்கரை நேற்று ரூ.65-க்கு குறைந்தது. இதன்மூலம் சர்க்கரை விலை 9.7 சதவீதம் சரிந்துள்ளது.மேலும், வரும் நாட்களில் சர்க்கரை விலை தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத் தலைவர் நீரஜ் ஷிர்கோகர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு