Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 09 செப்டம்பர் 2026 | 24 ஆவணி பராபவ வருடம்

தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு

தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதாப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளர் பொறுப்பு லில்லிக்கு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திர மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அச்சு மற்றும் எழுதுபொருள் துறை ஆணையராக சரவண செல்வராஜும், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக அஜய் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக சிவநந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டான்சி நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பு முருகானந்தத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தின் முதன்மைச் செயலாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கந்தசாமியும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக கவிதா ராமுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தாட்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு