Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 23 அக்டோபர் 2026 | 6 ஐப்பசி பராபவ வருடம்

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் என மொத்தம் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கோயம்புத்தூர், நெல்லை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நடவடிக்கை நடைபெற்றது. அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக எழும் புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவ்வப்போது திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் 62 சார்பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.37.76 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் லஞ்சம் கேட்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

Advertisement
புதுக்கோட்டை நகர ஊரமைப்பு அலுவலகத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி அலுவலகம், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம், பரமக்குடி நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையின்போது லஞ்சப் பணம் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்கு பணியிலிருந்த ஊழியர்களை ஒரே இடத்தில் அமர வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஈரோடு நகர ஊரமைப்பு அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதேபோல், பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,060
🥈 Silver ₹225.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு