Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 07 நவம்பர் 2026 | 21 ஐப்பசி பராபவ வருடம்

தீமையின் இருளை நீக்கும் நன்மையின் சுடர் பரவி... வீடியோ வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் தீபாவளி வாழ்த்து..!

தீமையின் இருளை நீக்கும் நன்மையின் சுடர் பரவி... வீடியோ வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் தீபாவளி வாழ்த்து..!

தீபாவளிப் பண்டிகை நாளை (நவம்பர் 8) கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக மக்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் வீடியோ வெளியிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தீபாவளித் திருநாள் மக்களின் மனங்களில் புதிய நம்பிக்கை, உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாளாக அமைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இருள் விலகி ஒளி பிறப்பதையும், தீமைகள் அழிந்து நன்மைகள் வெற்றி பெறுவதையும் குறிக்கும் இந்தப் பண்டிகையை அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
அன்பையும் மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் ஆனந்தம் நிறைந்து, மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையும் உற்சாகமும் பெருக வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இல்லங்கள் தீப ஒளியால் ஜொலிக்கும் வேளையில், மக்களின் இதயங்களிலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தீமையை அகற்றும் நன்மையின் ஒளி எங்கும் பரவி, அன்பும் புன்னகையும் நிறைந்ததாக இந்தத் தீபாவளி அமைய வேண்டும் என்றும் கூறி, தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு