தொடரும் சோகம்.. சிதைந்த நேபாளம்.. ஆயிரத்தை நெருங்கிய உயிரிழப்புகள்: 3,916 பேர் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு அந்நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்ட தகவலின்படி, வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்துள்ளது.இமயமலைப் பகுதியில் உருவாகி தெற்கு நோக்கிப் பாயும் போடேகோஷி ஆற்றில் கடந்த 26-ந்தேதி திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டிடங்கள் மற்றும் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன.ஆற்றின் வழித்தடத்தில் அமைந்திருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு வசித்து வந்த ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நேபாள மக்களுடன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா சென்றிருந்த நூற்றுக்கணக்கானவர்களும் வெள்ளத்தில்சிக்கிகாணாமல்போயுள்ளனர்.வெள்ளத்தில்அடித்துச்செல்லப்பட்டவர்களில் பலர் உயிரிழந்துள்ளதும், தொடர்ந்து மீட்கப்படும் உடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. செவ்வாய்க்கிழமையும் பல்வேறு இடங்களில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டநிலையில்,உயிரிழப்புஎண்ணிக்கை987ஆகஉயர்ந்துள்ளது.இதற்கிடையே, இந்தியர்கள் உள்ளிட்ட 591 வெளிநாட்டினர், 99 பாதுகாப்பு வீரர்கள் உள்பட சுமார் 3,916 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் உயிருடன் உள்ளார்களா என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.இதுவரை11,814பேர்மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.சீனப் பகுதியிலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 546 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசின் ஊடகமான CCTV ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.பேரிடர் பாதித்த பகுதிகளில் செயல்பட்டு வந்த நீர்மின் நிலையங்களிலும் வெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.