Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 16 அக்டோபர் 2026 | 30 புரட்டாசி பராபவ வருடம்

தசரா பண்டிகை: அக்டோபர் 25 வரை சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை – அவசர வழக்குகள் விசாரணை அறிவிப்பு

தசரா பண்டிகை: அக்டோபர் 25 வரை சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை – அவசர வழக்குகள் விசாரணை அறிவிப்பு

தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவசர வழக்குகளைத் தாக்கல் செய்வது மற்றும் விசாரிப்பது தொடர்பான விவரங்களை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி வெளியிட்டுள்ளார். அதன்படி, அவசர வழக்குகளை அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த விசாரணைகளை நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே. முத்துக்குமார், வி. லட்சுமிநாராயணன், என். செந்தில்குமார் மற்றும் என். ரமேஷ் ஆகியோர் மேற்கொள்வார்கள். அதேபோல், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ஐ.ஆர்.சி.பி. முருகன் மற்றும் என். திலீப்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு