தசரா பண்டிகை: அக்டோபர் 25 வரை சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை – அவசர வழக்குகள் விசாரணை அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தசரா பண்டிகை: அக்டோபர் 25 வரை சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை – அவசர வழக்குகள் விசாரணை அறிவிப்பு

தசரா பண்டிகை: அக்டோபர் 25 வரை சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை – அவசர வழக்குகள் விசாரணை அறிவிப்பு

தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவசர வழக்குகளைத் தாக்கல் செய்வது மற்றும் விசாரிப்பது தொடர்பான விவரங்களை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி வெளியிட்டுள்ளார். அதன்படி, அவசர வழக்குகளை அக்டோபர் 21-ம் தேதி தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த விசாரணைகளை நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே. முத்துக்குமார், வி. லட்சுமிநாராயணன், என். செந்தில்குமார் மற்றும் என். ரமேஷ் ஆகியோர் மேற்கொள்வார்கள். அதேபோல், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ஐ.ஆர்.சி.பி. முருகன் மற்றும் என். திலீப்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.