Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 28 ஆகஸ்ட் 2026 | 12 ஆவணி பராபவ வருடம்

தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்தது... நிலவரம் என்ன..?

தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக குறைந்தது... நிலவரம் என்ன..?
தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.160 குறைந்து ரூ.1,20,080-க்கு விற்பனையானது. நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையிலேயே நீடித்தது.இந்நிலையில், இன்று காலை தங்கம் விலை மீண்டும் குறைந்தது. ஒரு சவரனுக்கு ரூ.560-ம், ஒரு கிராமுக்கு ரூ.70-ம் குறைந்து, சவரன் ரூ.1,19,520-க்கும், கிராம் ரூ.14,940-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, இன்று பிற்பகலில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக சரிந்துள்ளது.
Advertisement
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,17,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமின் விலையும் ரூ.215 குறைந்து ரூ.14,725-ஆக உள்ளது.இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை மொத்தமாக ரூ.2,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு