'டேர் டெவில்' – அஜித் குமார் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு!
நடிகர் அஜித் குமார் தனது 64-வது திரைப்படத்தின் (AK 64) தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'டேர் டெவில்' (Dare Devil) என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இயக்குகிறார்.
இந்தப் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் தனது Brave Hearts Production நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் பணியாற்றுகிறார்.
படத்தின் முதல் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. சிவப்பு மற்றும் வெள்ளை நிற பின்னணியில் பகடை (Dice) வடிவமைப்புடன் "Dare Devil" என்ற தலைப்பு இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றுள்ளது.
சிலர் உற்சாகமாக வரவேற்ற நிலையில், மற்றொரு தரப்பு போஸ்டர் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், புதிய பட அறிவிப்பை நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்ட 'Gladiators' என்ற ஆவணப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.