Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 05 அக்டோபர் 2026 | 19 புரட்டாசி பராபவ வருடம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில், 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவற்றில் 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆண்டு தேர்வு அட்டவணையின்படி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. இந்தத் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இடம்பெறும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி தகுதி குரூப்-4 தேர்வில் இடம்பெறும் பெரும்பாலான பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி.

Advertisement
தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தேர்வுக்கு பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளே அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனால், நடப்பு ஆண்டுக்கான தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, நாளை வெளியாகும் குரூப்-4 தேர்வு அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு