டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 6 தேர்வுகளில், 5 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அவற்றில் 3 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆண்டு தேர்வு அட்டவணையின்படி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. இந்தத் தேர்வு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என தேர்வு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் இடம்பெறும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி தகுதி குரூப்-4 தேர்வில் இடம்பெறும் பெரும்பாலான பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தேர்வுக்கு பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளே அதிக அளவில் விண்ணப்பித்து வருகின்றனர். கடந்த குரூப்-4 தேர்வுக்கு 13.89 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனால், நடப்பு ஆண்டுக்கான தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக, நாளை வெளியாகும் குரூப்-4 தேர்வு அறிவிப்பில் கூடுதல் பணியிடங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.