Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
திங்கள் | 07 செப்டம்பர் 2026 | 22 ஆவணி பராபவ வருடம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு: 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் மூலம் அசிஸ்டென்ட் இன்ஸ்பெக்டர், டெபுடி கமர்ஷியல் டேக்ஸ் ஆபீசர், ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபீசர், புரபேஷன் ஆபீசர், சப்-ரிஜிஸ்டிரார் கிரேடு-II, ஜெயிலர், ஸ்பெஷல் அசிஸ்டென்ட், ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட், ஸ்டோர்கீப்பர், அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர், சீனியர் இன்ஸ்பெக்டர், ஆடிட் இன்ஸ்பெக்டர், கைத்தறி இன்ஸ்பெக்டர், சூபர்வைசர்/இளநிலை கண்காணிப்பாளர், சீனியர் ரெவினியூ இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், அசிஸ்டென்ட் பணிக்கு 686 இடங்களும், அக்கவுன்டென்ட் பணிக்கு 31 இடங்களும், எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-III பணிக்கு 9 இடங்களும், எக்சிக்யூட்டிவ் ஆபீசர் கிரேடு-II பணிக்கு ஒரு இடமும், லோயர் டிவிசன் கிளார்க் பணிக்கு 20 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் அக்கவுன்டென்ட் மற்றும் ஆண் வார்டன் உள்ளிட்ட பணிகளும் இதில் அடங்கும். கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் செக்‌ஷன் ஆபீசர் பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஜெனரல் லா பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்கள் அல்லது ஏதேனும் ஒரு பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சப்-ரிஜிஸ்டிரார் கிரேடு-II பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பி.எல். பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதியாகும். ஸ்பெஷல் பிராஞ்ச் அசிஸ்டென்ட் பணிக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்கது. மற்ற பணிகளுக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement
வயது வரம்பு: பொதுப்பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். பொதுப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, அருந்ததியர், எஸ்டி, பிற்பட்டோர், சீர்மரபினர் மற்றும் முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. தேர்வு முறை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதலில் பிரிலிமினரி தேர்வும், அதனைத் தொடர்ந்து மெயின் தேர்வும் நடத்தப்படும். பிரிலிமினரி தேர்வு நவம்பர் 1-ந் தேதி நடைபெற உள்ளது. பிரிலிமினரி தேர்வில் பொது அறிவு, கணித அறிவு மற்றும் தமிழ் அல்லது ஆங்கில மொழித்திறன் தொடர்பான கேள்விகள் இடம்பெறும். பொது அறிவு கேள்விகள் பட்டப்படிப்பு நிலையிலும், மொழித்திறன் கேள்விகள் 10-ம் வகுப்பு நிலையிலும் இருக்கும். பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுக் கட்டணம்: முதல் நிலைத் தேர்வுக்கு மட்டும் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் **[www.tnpsc.gov.in](http://www.tnpsc.gov.in)** இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 09.09.2026 கடைசி நாளாகும்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு