Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

டெல்லி: நாடாளுமன்றம் அருகே திடீர் தீ விபத்து

டெல்லி:  நாடாளுமன்றம் அருகே திடீர் தீ விபத்து

டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள மத்திய செயலகத்தின் வடக்கு பிளாக் கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் காலை 11.10 மணியளவில் நிகழ்ந்தது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், டெல்லி தீயணைப்புத் துறையினர் 6 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீ வேகமாகப் பரவியதால், அப்பகுதியில் வானளாவிய கரும்புகை எழுந்தது. இந்தத் தீ விபத்தில் கட்டிடத்திற்கோ அல்லது அங்கிருந்த முக்கிய ஆவணங்களுக்கோ சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையே, அந்தக் கட்டிடத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்த சிவசேனா எம்.பி. மிலிந்த் தியோரா, தீ விபத்தை நேரில் பார்த்துள்ளார். இதுகுறித்த தகவலையும் அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு