Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்: சென்னையில் நாளை இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தல்: சென்னையில் நாளை இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளின் ஒரு பகுதியாக 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தியா கூட்டணி கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று தொடங்கிய போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினரும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்பினரும் பங்கேற்றனர்.

Advertisement
தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், அண்மையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பிலும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் பின்னணியில், SIR விவகாரத்தைக் காரணமாகக் குறிப்பிட்டு ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் நாளை இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், த.வெ.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன், வைகோ, தொல். திருமாவளவன், கே.எம். காதர் மொய்தீன், எம். வீரபாண்டியன், பெ. சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு