Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

ஜெம் வீரமணி வீடு, அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

ஜெம் வீரமணி வீடு, அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் கிரானைட் வீரமணி, 84 வயதில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக வீரமணி பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை தனிப்படை போலீசார் சேகரித்து வருகின்றனர். விசாரணையின்போது போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் வீடியோ ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தொடர்புடைய யாரையும் விட்டுவிடக் கூடாது என்றும் முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அமல்ராஜின் நேரடி கண்காணிப்பில், கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ரூ.70 கோடி வரை செட்டில்மென்ட் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கிலும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு