Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 30 அக்டோபர் 2026 | 13 ஐப்பசி பராபவ வருடம்

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘13’ திரைப்படம் டிசம்பரில் ரிலீஸ்: புதிய அப்டேட் வெளியீடு

ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘13’ திரைப்படம் டிசம்பரில் ரிலீஸ்: புதிய அப்டேட் வெளியீடு

இயக்குநர் கே. விவேக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஆதித்யா கதிர், பவ்யா திரிகா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் ஸ்டூடியோஸ் மற்றும் அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் திரைப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இப்படத்தில் யூடியூபராக நடித்துள்ள ஜி.வி. பிரகாஷ், தனது நண்பர்களுடன் இணைந்து விசித்திரமான, இயற்கைக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் நிறைந்த சூழலில் சிக்கிக்கொள்வது போன்ற கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கவுதம் மேனன் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

Advertisement
சித்து குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியானது. சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில், தற்போது டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் கே. விவேக் புதிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, ‘13’ திரைப்படத்தில் இடம்பெறும் நல்ல சக்தி மற்றும் தீய சக்திகளின் முகங்கள் அக்டோபர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக, மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த ‘செல்பி’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு