ஜி.எஸ்.டி. கவுன்சில் செப். 12-ல் கூடுகிறது: மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 12-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ள இந்த கவுன்சில், ஓராண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூடுகிறது.இதற்கு முன், 2026-ம் ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் மற்றும் வரி அடுக்குகளில் பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தன.அதன்படி, இதுவரை 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி.