சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ் - 125 பேர் பாதிப்பு...
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து அலாஸ்கா மற்றும் கனடாவுக்கு சென்ற சொகுசு சுற்றுலா கப்பலில் நோரோ வைரஸ் பரவியதால் 125 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 102 பயணிகளும், 23 பணியாளர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கப்பல் முழுவதும் தீவிர கிருமிநாசினி தெளிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், அடுத்த பயணத்திற்கு முன்பு கப்பல் முழுமையாக சுத்தம் செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.