சென்னை மெட்ரோவில் ஜூலையில் 1.06 கோடி பயணிகள்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஜூலை மாதத்தில் 1.06 கோடிக்கும் அதிகமானோர் மெட்ரோ சேவையை பயன்படுத்தி பயணம் செய்துள்ளனர். பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையாக தொடர்ந்து செயல்பட்டு வரும் மெட்ரோ, இந்த மாதத்தில் புதிய பயணிகள் சாதனையை பதிவு செய்துள்ளது.
சென்னை மக்களுக்கு விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்கி வரும் சென்னை மெட்ரோ ரெயில் சேவையை, 2026 ஜூலை மாதத்தில் மொத்தம் 1,06,37,647 பேர் பயன்படுத்தியுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026 ஜூலை 24ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 3,84,412 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் சிங்கார சென்னை அட்டை (தேசிய பொது இயக்க அட்டை) மூலம் 55,87,494 பேர் பயணம் செய்துள்ளனர். மேலும், QR பயணச்சீட்டு முறைகள் வழியாகவும் கணிசமானோர் மெட்ரோ சேவையை பயன்படுத்தியுள்ளனர். அதில் Single Journey Paper QR மூலம் 19,66,202 பேர், Online QR மூலம் 1,47,760 பேர், Static QR மூலம் 2,24,701 பேர், WhatsApp மூலம் 4,51,715 பேர், Paytm மூலம் 2,99,228 பேர், ONDC மூலம் 12,68,411 பேர், PhonePe மூலம் 2,84,121 பேர், CMRL Mobile App (SVP) மூலம் 95,430 பேர், Chennai One App மூலம் 2,98,702 பேர், மற்றும் HCL 50 Year Celebration Music Concert Event QR மூலம் 13,883 பேர் பயணம் செய்துள்ளனர்.மேலும், Digital SVP, QR குறியீட்டு பயணச்சீட்டு, WhatsApp (+91 83000 86000), Paytm, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி பயணம் செய்பவர்களுக்கு 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருவதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் வாங்கப்படும் Single Journey Paper QRபயணச்சீட்டுகளுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மெட்ரோ ரெயில்கள் மற்றும் நிலையங்களை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிப்பதில் தொடர்ந்து ஒத்துழைத்து வரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது நன்றியை தெரிவித்துள்ளது.