Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 14 அக்டோபர் 2026 | 28 புரட்டாசி பராபவ வருடம்

சென்னையில் ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்: முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்

சென்னையில் ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம்: முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்

சென்னையில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.3,108 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள பிரதான சுற்றுக்குழாய் திட்டத்திற்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார். சென்னைக்கு ஏரிகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் கிடைக்கும் நீரை, 84 குடிநீர் விநியோக நிலையங்களுடன் இணைக்கப்பட்ட பிரதான குழாய்கள் வழியாக மக்களுக்கு வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளொன்றுக்கு 120 கோடி லிட்டர் குடிநீரை விநியோகிப்பதற்கான கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையின் ஏதேனும் ஒரு பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழலில், மற்றொரு பகுதியில் இருந்து தேவையான இடத்திற்கு நீரை மாற்றி அனுப்புவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பிரதான சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில், நாளொன்றுக்கு 40 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உட்பட மொத்தம் 9 குடிநீர் ஆதாரங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட உள்ளன.

Advertisement
மேலும், உந்து நிலையங்கள் மற்றும் குடிநீர் விநியோகக் குழாய்களுடன் சேர்த்து 98 கிலோமீட்டர் தொலைவுக்கு துருப்பிடிக்காத எஃகு குழாய்கள் பதிக்கப்படவுள்ளன. நாளொன்றுக்கு 1,762 மில்லியன் லிட்டர் குடிநீரைக் கையாளும் திறன் கொண்டதாக இந்தச் சுற்றுக்குழாய் திட்டம் அமைக்கப்பட உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் மொத்தம் ரூ.3,108 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில், சோழிங்கநல்லூரில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அப்போது, மணலை அள்ளிப் போட்டதுடன் மரக்கன்றையும் நட்டு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் குடிநீர்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,590
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு