Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

சுதந்திர தின விடுமுறை: 2 நாட்களில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை

சுதந்திர தின விடுமுறை: 2 நாட்களில் ரூ.423 கோடிக்கு மது விற்பனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15-ந்தேதி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விடுமுறைக்கு முந்தைய ஆகஸ்டு 14-ந்தேதியும், அதற்கு மறுநாளான 16-ந்தேதியும் மதுவிற்பனை நடைபெற்றது.ஆகஸ்டு 14-ந்தேதி 5 மண்டலங்களில் மொத்தம் ரூ.213.78 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது. இதில் சென்னை மண்டலத்தில் ரூ.55.39 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.43.34 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.42.36 கோடியும், மதுரை மண்டலத்தில் ரூ.39.89 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.32.20 கோடியும் விற்பனையானது.ஆகஸ்டு 16-ந்தேதி 5 மண்டலங்களிலும் சேர்த்து ரூ.209.22 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. சென்னை மண்டலத்தில் ரூ.55.40 கோடியும், திருச்சியில் ரூ.42.48 கோடியும், சேலத்தில் ரூ.38.64 கோடியும், மதுரையில் ரூ.38.63 கோடியும், கோவையில் ரூ.34.07 கோடியும் மதுவிற்பனை செய்யப்பட்டது.இதன்படி, சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதற்கு முந்தைய மற்றும் அடுத்த நாள்களில் சேர்த்து 2 நாட்களில் தமிழகத்தில் ரூ.423 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.ஆன்லைன் விற்பனையைப் பொறுத்தவரை, ஆகஸ்டு 14-ந்தேதி ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்துக்கும், 16-ந்தேதி ரூ.3 லட்சத்து 59 ஆயிரத்துக்கும் மதுவிற்பனை நடைபெற்றது. இரு நாட்களிலும் சேர்த்து ஆன்லைன் மூலம் ரூ.9 லட்சத்து 97 ஆயிரத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு