சீன ஆண்களுக்கு எச்சரிக்கை: வங்காளதேச பெண்கள் தொடர்பான திருமண மோசடிகளில் சிக்க வேண்டாம்
சீனாவில் திருமண வயதுடைய பெண்களை விட ஆண்கள் சுமார் 2 கோடி பேர் அதிகமாக இருப்பதாக 2020 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதனால் சில சீன ஆண்கள் வங்காளதேசம் உள்ளிட்ட ஏழை நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது.மனைவியைக் கண்டுபிடிக்க பலர் ஆயிரக்கணக்கான யுவான்களை செலவிடுகின்றனர். ஆனால் சில சந்தர்ப்பங்களில், வெளிநாட்டு மணப்பெண்கள் என அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகும் திருமண மோசடிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதையடுத்து, சீனத் தூதரகம் வெளிநாடுகளில் நடைபெறும் திருமண மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல் கும்பல்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், இடைத்தரகர்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமானவர்களை மட்டுமே நம்பி சட்டவிரோத திருமணங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கு முன் அந்தந்த நாட்டின் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.