’சிம்புவுடன் முதல் முறையாக நடிக்கிறேன்’ - ‘அரசன்’ படத்தில் இருப்பதை உறுதி செய்த பிரபல நடிகை
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. வடசென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,‘அரசன்’குறித்தஅடுத்தடுத்தமுக்கியஅறிவிப்புகள்விரைவில்வெளியாகும்எனஎதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியங்கா மோகன், ‘அரசன்’படத்தில்தான்நடிப்பதைஉறுதிப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து பேசிய அவர், வெற்றிமாறனின் படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் முக்கியமான வாய்ப்பு என்றும், சிம்புவுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், இப்படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வித்தியாசமான சிம்புவை பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.