சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் கொலை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்
சவுதி அரேபியாவில் மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.அவர் கூறியதாவது:மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மாவீரன், சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஈரானிய கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீனவர் மாவீரன் உயிரிழந்தது தொடர்பாக சவுதி அரேபியாவில் விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணை காரணமாக மாவீரனின் உடலை தமிழகம் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவரது உடலை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தூதரகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.