Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

சாலையில் கவிழ்ந்த பால் டேங்கர்: போட்டி போட்டு பாத்திரங்களில் பாலை பிடித்து சென்ற மக்கள்

சாலையில் கவிழ்ந்த பால் டேங்கர்: போட்டி போட்டு பாத்திரங்களில் பாலை பிடித்து சென்ற மக்கள்

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பால் டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் இருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாத்திரங்களுடன் வந்து பாலை பிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத்தில் இருந்து விரார் நோக்கி அமுல் நிறுவனத்துக்குச் சொந்தமான பால் டேங்கர் லாரி ஒன்று நேற்று (திங்கட்கிழமை) புறப்பட்டது. பால்கர் மாவட்டம் தவா கிராமம் அருகே மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகல் 3 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் டேங்கரின் மேற்பகுதி சேதமடைந்ததால், அதற்குள் இருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பால் சாலையில் கொட்டியது.

Advertisement
இதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டனர். சிலர் வீடுகளில் இருந்து குடங்கள், வாளிகள், அண்டாக்கள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களை கொண்டு வந்து சாலையில் ஓடிய பாலை பிடித்துச் சென்றனர். தகவல் அறிந்து காசா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான டேங்கர் லாரி மீட்கப்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து காரணமாக மும்பை-அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு