Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 02 அக்டோபர் 2026 | 16 புரட்டாசி பராபவ வருடம்

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி

சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 18 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ந்தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், பின்னர் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக உயர்ந்தார்.டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்று, இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.சர்வதேச கிரிக்கெட்டில் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கோலி, இதுவரை 28,000-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.

Advertisement
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர் 2-வது இடத்தில் உள்ளார்.2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரே விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் பயணத்தின் கடைசி தொடராக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,775
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு