Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

சதாப் கான் அதிரடி சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி!

சதாப் கான் அதிரடி சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி!

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. சதாப் கானின் அபாரமான ஆட்டம் பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 18-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லாகூரில் இன்று நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 46.4 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் குவித்தார்.

Advertisement
பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் ஷாகின் ஷா அப்ரிடி சிறப்பாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, கடைசி வரை போராடி 47.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றியைத் தன்வசப்படுத்தியது. பாகிஸ்தான் அணியின் வெற்றியில் சதாப் கான் முக்கியப் பங்கு வகித்தார். அதிரடியாக விளையாடிய அவர், 96 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேமி ஓவர்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு