சட்டமன்ற தேர்தல்களுக்கு பா.ஜ.க. ரூ.1,473 கோடி நன்கொடை பெற்றதாக அறிவிப்பு
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களையொட்டி தேசிய கட்சிகளான பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தாக்கல் செய்துள்ள வரவு-செலவு கணக்குகள் வெளியாகியுள்ளன. தேர்தல் கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கணக்குகளின்படி, பா.ஜ.க. தேசிய தலைமை ரூ.1,472.8 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை மற்றும் மாநில அமைப்புகள் இணைந்து ரூ.207.17 கோடி நன்கொடை பெற்றுள்ளன. இதன்படி, காங்கிரசை விட பா.ஜ.க. சுமார் 7 மடங்கு அதிக நன்கொடை பெற்றுள்ளது. பா.ஜ.க. தேசிய தலைமை அலுவலகம் மூலம் பெறப்பட்ட ரூ.1,472.8 கோடி மட்டுமே தற்போது கணக்கில் இடம்பெற்றுள்ளது. கட்சியின் மாநில அலுவலகங்கள் வாயிலாக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. எனவே, பா.ஜ.க. பெற்ற மொத்த நன்கொடை தொகை மேலும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 3 மாநிலங்களில் பா.ஜ.க. ரூ.159.7 கோடி செலவு அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் பணிகளுக்காக பா.ஜ.க. ரூ.159.7 கோடி செலவிட்டுள்ளது. இதில் ரூ.130.4 கோடி பிரசாரத்திற்காகவும், மீதமுள்ள தொகை வேட்பாளர்களின் செலவுகள் உள்ளிட்டவற்றிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் அசாம் மாநிலத்துக்கு அதிகபட்சமாக ரூ.96.27 கோடியை பா.ஜ.க. தலைமை செலவிட்டுள்ளது. இதில் ரூ.76.73 கோடி பிரசாரத்திற்கும், ரூ.19.54 கோடி வேட்பாளர்களுக்குமான செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.51.56 கோடி செலவு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.