Skip to main content
🌤️ —°C
சனி | 15 ஆகஸ்ட் 2026 | 30 ஆடி பராபவ வருடம்

கொசோவோ பிரதமர் மீது முட்டை வீச்சு; நாடாளுமன்றத்தில் பரபரப்பு

கொசோவோ பிரதமர் மீது முட்டை வீச்சு; நாடாளுமன்றத்தில் பரபரப்பு
கொசோவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்.பி. ஒருவர் முட்டைகளை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு கொசோவோ நாடாளுமன்றம் கூடியது. கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், நாட்டின் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக இடைக்கால பிரதமர் அல்பின் குர்தி தெரிவித்தார். மேலும், இதுதொடர்பான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அலையன்ஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டைம் காத்ரிஜாஜ், தன்னிடம் வைத்திருந்த பழுப்பு நிற முட்டைகளை எடுத்து பிரதமர் மீது வீசத் தொடங்கினார்.மேலும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரதமரை நோக்கி “அவமானம், அவமானம்” எனக் கூறினார்.
Advertisement
இதையடுத்து சக எம்.பி.க்களும் நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியாளர்களும் தலையிட்டு அந்தப் பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர்.இந்த எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன.சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை முன்மொழிவதற்கு முன்பு எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர் முட்டை வீசிய சம்பவம் நாடாளுமன்றத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு