Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 07 அக்டோபர் 2026 | 21 புரட்டாசி பராபவ வருடம்

கூலிப்படை தலைவர்களாக மாறும் தவெக நிர்வாகிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கூலிப்படை தலைவர்களாக மாறும் தவெக நிர்வாகிகள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சென்னை அருகே கேளம்பாக்கம் தையூரில், தவெக நிர்வாகி ஏழுமலை தனது மகளின் காதலனை கூலிப்படை மூலம் கொலை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், தவெக நிர்வாகிகள் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ரவுடியிசம், மாமூல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதாகவும், இதனை கட்சித் தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதும், கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதும் மட்டுமே தீர்வாகாது என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.கட்சிக்குள் நிர்வாகிகள் என்ற பெயரில் செயல்படும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,675
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு