Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

‘குழந்தைகளை பாதுகாப்போம்; அவர்களின் கனவுகளை வளர்ப்போம்’ – பிரேமலதா விஜயகாந்த் குழந்தைகள் தின வாழ்த்து

‘குழந்தைகளை பாதுகாப்போம்; அவர்களின் கனவுகளை வளர்ப்போம்’ – பிரேமலதா விஜயகாந்த் குழந்தைகள் தின வாழ்த்து

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் குழந்தைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தியில், குழந்தைகளின் மகிழ்ச்சியும் எதிர்காலமுமே நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில், ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி, சத்தான உணவு, சிறந்த மருத்துவ வசதி, பாதுகாப்பான வாழ்விடம் மற்றும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் வளர்வதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், குழந்தைத் தொழிலாளர் முறை மற்றும் அனைத்து விதமான பாகுபாடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களது கனவுகள் நனவாகவும் எதிர்காலம் சிறப்பாக அமையவும் பாடுபடுவது அனைவரின் பொறுப்பு என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். குழந்தைகளைப் பாதுகாத்து, அவர்களின் கனவுகளை வளர்ப்பதன் மூலம் வளமான பாரதத்தை உருவாக்குவோம் எனக் குறிப்பிட்டு, அனைத்து குழந்தைகளுக்கும் தனது இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு