Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 23 செப்டம்பர் 2026 | 7 புரட்டாசி பராபவ வருடம்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ்பாபு (55), ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் தனது வாகனத்தில் கிருஷ்ணகிரி–ஓசூர் இடையே சென்று வரும் அவர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளின் பராமரிப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரங்களைப் பெற்றார். சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனக் கூறி, கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் புகார் அளித்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. நீதிமன்றத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கமிஷனர் பிரியா, சுங்கச்சாவடி எல்லைக்குட்பட்ட சாலைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தார். இதற்கிடையில், முந்தைய பராமரிப்பு ஒப்பந்ததாரருடன் தொடர்புடைய வழக்கு நிலுவையில் இருந்ததால் சாலை பராமரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விளக்கத்தை நுகர்வோர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ரூ.15 ஆயிரத்தை வழக்கு செலவாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, 2021-ம் ஆண்டு மார்ச் முதல் 2025-ம் ஆண்டு ஏப்ரல் வரை கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ.919.91 கோடி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இவ்வளவு வருவாய் கிடைத்திருந்தபோதிலும், சாலைகள் பாதுகாப்பாகவும், போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் மன உளைச்சலையும் கருத்தில் கொண்டு, பராமரிப்பு ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்தத் தொகையை தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் சட்ட உதவி நிதியில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அனைத்து குறைபாடுகளையும் 2 மாதங்களுக்குள் சரிசெய்ய வேண்டும் என்றும், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகள் மற்றும் போக்குவரத்து வழிகாட்டும் குறியீடுகளை அமைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,135
🥈 Silver ₹255.00
Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு