Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதையொட்டி, துறை சார்ந்த பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார். 2026-2027-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆகஸ்டு 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்களும், அமைச்சர்களின் பதில் உரைகளும் நடைபெற்றன. ஆகஸ்டு 17-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 43 துறைகளுக்கான விவாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், காவல் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். மேலும், நடப்பு ஆண்டில் 5,000 பெண் காவலர்கள் உள்பட மொத்தம் 10,000 காவலர்கள்** தமிழ்நாடு காவல் படையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: * போதைப்பொருள் பயன்பாட்டை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பாக செயல்படும் 50 கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம்வழங்கப்படும். * காவல் துறையை நவீனமயமாக்க ரூ.212 கோடி ஒதுக்கப்படும். * செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும். * லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அனைத்து காவல் பிரிவுகளுக்கும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் சிறப்புத் திடீர் செலவின நிதி உயர்த்தி வழங்கப்படும். * பணியின்போது துணிச்சலுடன் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு*வழங்கப்படும். * பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். * வண்டலூர் அருகேயுள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் உள்விளையாட்டு, வெளிப்புற விளையாட்டு அரங்குகள் மற்றும் பிற விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடிசெலவில் அமைக்கப்படும். * சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் சுமார் ரூ.14 கோடிசெலவில் புதிய டி.என்.ஏ. பரிசோதனைப் பிரிவுகள் அமைக்கப்படும். * 6 இடங்களில் ரூ.16 கோடிசெலவில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் உருவாக்கப்படும்.

Advertisement
* 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள், பணியாளர்களுக்காக 131 புதிய குடியிருப்புகள் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும். * தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சிக் கழகத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். * காவல் துறையின் செயல்திறனை அதிகரிக்க ரூ.200 கோடி செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்படும். காவல் மாவட்டங்கள் மற்றும் சரகங்களில் மாற்றம் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு, பூந்தமல்லி புதிய காவல் மாவட்டமாக உருவாக்கப்படும். அதேபோல், பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகம் உருவாக்கப்படும்.தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சட்டம்-ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரகங்கள் மறுசீரமைக்கப்பட்டு, கிளாம்பாக்கம் புதிய காவல் மாவட்டமாக உருவாக்கப்படும். மேலும், கூடுவாஞ்சேரி காவல் சரகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிளாம்பாக்கம் காவல் சரகம் புதிதாக உருவாக்கப்படும். புதிய காவல் நிலையக் கட்டடங்கள் காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தூய்மைப் பணிகள் வெளிமுகமை மூலம் மேற்கொள்ளப்படும். இதற்காக ஆண்டுக்கு ரூ.60 கோடி செலவிடப்படும். மேலும், பல்வேறு மாவட்டங்களில் புதிய காவல் நிலையக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன: * கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம் மற்றும் பிற அலுவலகக் கட்டடங்கள் – ரூ.21 கோடி * நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலையம் – ரூ.4.15 கோடி * காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலையம் – ரூ.3.29 கோடி * சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலையம் – ரூ.2.65 கோடி * தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் புதிய நகர காவல் நிலையம் – ரூ.2.53 கோடி * தென்காசி மாவட்டம் அய்யாபுரத்தில் புதிய ஊரக காவல் நிலையம் – ரூ.2.14 கோடி * ஈரோடு மாவட்டம் கடத்தூர் ஊரக காவல் நிலையம் –ரூ.1.76 கோடி * தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் – ரூ.1.9 கோடி * தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் – *ரூ.1.95 கோடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், போக்குவரத்து காவல் நிலையம் உள்ளிட்ட மகளிர் காவல் நிலையத்துக்கான புதிய கட்டடம் – ரூ.3.66 கோடி

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு