Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

காவலர் தினம்: “அரச காவல்” ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

காவலர் தினம்: “அரச காவல்” ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

செப்டம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் “அரச காவல்” என்ற ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.ACS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும்படத்தை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். காவல்துறையினரின் பணிச்சுமை, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டு குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.

Advertisement
திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் ஆகியோர் பங்கேற்று குறும்படத்தை வெளியிட்டனர். தொடர்ந்து, படக்குழுவினரின் முயற்சியைப் பாராட்டினர்.நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்-இயக்குநர் சுபாஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர்கள் ராஜா, மாரியப்பன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு