Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 21 அக்டோபர் 2026 | 4 ஐப்பசி பராபவ வருடம்

அமுதம் அங்காடிகள் மூலம் சன்னரக அரிசி விற்பனை - மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

அமுதம் அங்காடிகள் மூலம்  சன்னரக அரிசி விற்பனை - மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி  வைத்தார்

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப. அவர்கள் (18.10.2026) அன்று மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம் முடக்குச்சாலையில் உள்ள மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு ணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் கூட்டுறவு அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து தொடரந்து பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள அரிசியின் தரம் மற்றும் இருப்புகுறித்து ஆய்வு செய்து பார்வையிட்டார்.

அரசாணை நிலை எண்.80 கூட்டுறவு உணவுமற்றும் நுகர்வோர் பாதுகாப்பு(ஜி2) துறை. நாள் 15.10.2026-இன்படி, தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஏ தர சன்னரக அரிசியை 31.03.2027 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து மாவட்டங்களில் செயல்படும் கூட்டுறவு பண்டகசாலைகளின் வாயிலாக சன்னரக அரிசி ஒரு கிலோ ரூபாய் 30-க்கு குடும்பம் ஒன்றிற்கு 5 கிலோ வீதம் விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
அதன்படி, மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் நடத்தப்படும். கீழ்கண்ட கூட்டுறவு பண்டகசாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் 18:10.2026 முதல் ஏ தர சன்னரக ஒரு கிலோஅரிசி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹரிஷ் - மதுரை மாவட்ட செய்தியாளர்

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,490
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு