செப்டம்பர் 6-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையத்தில் உள்ள அலங்கார் திரையரங்கில் “அரச காவல்” என்ற ஹெல்மெட் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.ACS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்தக் குறும்படத்தை ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ளார். காவல்துறையினரின் பணிச்சுமை, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டு குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சியில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன் ஆகியோர் பங்கேற்று குறும்படத்தை வெளியிட்டனர். தொடர்ந்து, படக்குழுவினரின் முயற்சியைப் பாராட்டினர்.நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்-இயக்குநர் சுபாஷ் சந்திரன், ஒளிப்பதிவாளர்கள் ராஜா, மாரியப்பன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.