காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைத்தது ஏன்? – தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ. வேலு கேள்வி
சட்டப்பேரவையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இரு பட்ஜெட்டுகள் குறித்த விவாதம் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கு நிதி அமைச்சர் மரிய வில்சனும், வேளாண்மை அமைச்சர் வினோத்தும் கடந்த 12-ந்தேதி பதிலளித்தனர்.இதையடுத்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் 2-வது நாள் அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சரத்குமார் பதிலளித்து வருகின்றனர்.இந்த விவாதத்தின்போது, தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுப் பேசிய எம்.எல்.ஏ. எ.வ. வேலு, காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பினார்.அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தலைவர்களுக்கு சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையிலேயே கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ததாகவும் தெரிவித்தார்.“தி.மு.க. அரசு கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை காமராஜர் உணவுத் திட்டம் என்று மாற்ற வேண்டிய தேவை என்ன? புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு காமராஜர் பெயரை வைத்திருக்கலாம். நாங்கள் தொடங்கிய திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.‘முதலமைச்சர்’ என்பது பொதுவான பதவி என்பதால் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடாத வகையில் அந்தப் பெயர் வைக்கப்பட்டதாகவும் எ.வ. வேலு கூறினார். மேலும், இந்த திட்டத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டிய காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.ஸ்டாலின் பெயரில் காலை உணவுத் திட்டத்தை அழைக்கலாம் என்று கூறப்பட்டபோதும், அதனை மு.க.