காமன்வெல்த் போட்டியில் வெண்கலத்துடன் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியது!
காமன்வெல்த் போட்டியில் வெண்கலத்துடன் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியது!
2026 காமன்வெல்த் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் ஜாண்டு குமார் (28) வெண்கலப் பதக்கம் வென்று, இந்த தொடரில் இந்தியாவின் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.இந்த வரலாற்றுச் சாதனையை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக் கணக்கை வெண்கலப் பதக்கத்துடன் தொடங்கி வைத்த ஜாண்டு குமாரின் செயல்திறன் பாராட்டுக்குரியது என்றும், அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இன்று (ஜூலை 25) இந்திய வீரர்கள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்
பெண்கள் அணி பைனல் தனிநபர் தகுதிச்சுற்று – பிரனதி நாயக், பிரதிஷ்டா சமந்தா, எஷிதா, நிஷ்கா, ரித்தி – மதியம் 2:30 மணி
பெண்கள் இரட்டையர் லீக் சுற்று– இந்தியா vs மால்டா – மதியம் 3:50 மணி
ஆண்கள் ஒற்றையர் லீக் சுற்று – சோனோவால் புதுல் – இரவு 7:30 மணி
ஆண்கள் 60 கிலோ 'ரவுண்டு-32' – சச்சின் சிவாச் – மாலை 4:00 மணி
ஆண்கள் 200 மீ.
'பிரீஸ்டைல்' (எஸ்14) தகுதிச்சுற்று – சைதன்யா விஷ்வாஸ் குல்கர்னி – மாலை 4:15 மணி
ஆண்கள் 400 மீ. 'பிரீஸ்டைல்' லீக் சுற்று – தக் ஷன் சசிகுமார், ஆர்யன் நெஹ்ரா – மாலை 4:20 மணி
பெண்கள் வீல்சேர் லீக் சுற்று – இந்தியா vs வேல்ஸ் – மாலை 4:35 மணி