Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா; விழுப்புரம் அருகே பரபரப்பு

கலெக்டர் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் தர்ணா; விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம் அருகே திருவக்கரை – பெரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பாதுகாப்பற்ற வகையில் லாரிகள் இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கனரக லாரிகளின் இயக்கத்தால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், பள்ளி நேரங்களில் இதுபோன்ற லாரிகளை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பெரும்பாக்கம் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement
இதுதொடர்பாக தங்களது கோரிக்கையை முன்வைக்க, இன்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்தனர். அப்போது, மாவட்ட கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் கார் முன்பு அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு